Wednesday, May 20, 2009

கிரசென்ட் நல் வாழ்வு சங்கத்தில் துவங்கியது தட்டச்சி பயிற்சி



உலகமே கணினி மயமாகிவிட்ட இந்த காலத்தில்.கிரசென்ட் நல் வாழ்வு சங்கம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு தட்டச்சி பயிற்சி முகாம் மாணவர்களிடம் அதிக வரவேற்பை பெற்று உள்ளது. மிக ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் இந்த இலவச தட்டச்சி பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.கோடை விடுமுறையில் கணினி பயிற்சி மற்றும் தட்டச்சி பயிற்சி மிக பயனுள்ளதாக இருக்கின்றது என்று மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிதனர்.

Tuesday, May 19, 2009

நகர ஜமாதுல் உலமா நடத்திய கோடை கால தீனியாத் பயிற்சி நிறைவு விழா



நகர ஜமாதுல் உலமா நடத்திய கோடை கால தீனியாத் பயிற்சி மற்றும் நிறைவு விழா கவுஸ் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இதில் வகுப்பு வாரியாக பிள்ளைகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டி சென்றனர்.இதில் பயான் போட்டியில் பங்குபெற்ற பாரிஸ் அஹமத் என்ற மாணவர் இந்திய சுத்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் மிக சிறப்பாக பேசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார், அனைவரின் பாராட்டையும் பெற்றார் எங்களின் சர்ர்பாக அவருக்கு வாழ்த்துக்கள்.அதற்கு முன்னர் நபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பில் பேசிய ரெஜினா பேகம் மற்றும் உம்மு ஹபிபா நபிகளாரின் தியாகத்தையும் அவர்கள் செய்த உலக சாதனைகளை பற்றியும் மிக அற்புதமாக பேசினார்கள்.அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன , இதில் ஜகரியா நானா , டவுன் ஹாஜி யஹயா சாபு, காஜா மைனுதீன் மிஸ்பாஹி, அபுதுல் சமத் ரசாதி , லியாகத் அலி மன்பயி சித்திக் அலி பாகவி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர் விழா இனிதே நிறைவுற்றது.





Monday, May 18, 2009

நகர ஜமாதுல் உலமா நடத்திய தீனியாத் போட்டிகள்


கடந்த இருபது நாட்களாக பரங்கிபேட்டை நகர ஜமாதுல் உலமா பேரவை நடத்திய தீனியாத் பயிற்சி வகுப்புகள் முடிந்து நேற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் சுமார் 150 பிள்ளைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் நகர ஜமாதுல் உலமா தலைவர் காஜா மைனுதீன் மிஸ்பாஹி , அபுதுல் சமத் ரசாதி , லியாகத் அலி மன்பயி சித்திக் அலி பாகவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளின் பரிசளிப்பு விழா இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறஉள்ளது.