Tuesday, May 19, 2009

நகர ஜமாதுல் உலமா நடத்திய கோடை கால தீனியாத் பயிற்சி நிறைவு விழா



நகர ஜமாதுல் உலமா நடத்திய கோடை கால தீனியாத் பயிற்சி மற்றும் நிறைவு விழா கவுஸ் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இதில் வகுப்பு வாரியாக பிள்ளைகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டி சென்றனர்.இதில் பயான் போட்டியில் பங்குபெற்ற பாரிஸ் அஹமத் என்ற மாணவர் இந்திய சுத்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் மிக சிறப்பாக பேசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார், அனைவரின் பாராட்டையும் பெற்றார் எங்களின் சர்ர்பாக அவருக்கு வாழ்த்துக்கள்.அதற்கு முன்னர் நபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பில் பேசிய ரெஜினா பேகம் மற்றும் உம்மு ஹபிபா நபிகளாரின் தியாகத்தையும் அவர்கள் செய்த உலக சாதனைகளை பற்றியும் மிக அற்புதமாக பேசினார்கள்.அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன , இதில் ஜகரியா நானா , டவுன் ஹாஜி யஹயா சாபு, காஜா மைனுதீன் மிஸ்பாஹி, அபுதுல் சமத் ரசாதி , லியாகத் அலி மன்பயி சித்திக் அலி பாகவி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர் விழா இனிதே நிறைவுற்றது.





2 comments:

  1. Hi, just found this blog and just have to ask: In what language are you writing?

    ReplyDelete
  2. reply for sofia this blog is posted in tamil language

    ReplyDelete