Tuesday, August 30, 2011

எங்களுக்கும் பெருநாள் தான்

பெருநாள் வந்து விட்டது நாம் அனைவரும் புத்தாடை அணிந்து வித விதமான உணவுகள் சமைத்து சாப்பிட்டு உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து கொண்டாட உள்ளோம்.. இதே வேலையில் இப்படியும் நம் சகோதர சகோதரிகள்... சொல்லாமல் இருக்க முடிய வில்லை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை










Kindle 3G, Free 3G + Wi-Fi, 3G Works Globally, Graphite, 6" Display with New E Ink Pearl Technology - includes Special Offers & Sponsored Screensavers

Friday, March 25, 2011

ஸ்ரீதர் வாண்டையார் பிரச்சாரம்

மீரபள்ளியில் ஸ்ரீதர் வாண்டையார் பொது மக்களை சந்தித்த பொது எடுத்த படங்கள்









பரங்கிபேட்டையில் ஸ்ரீதர் வாண்டையார் தேர்தல் பிரச்சாரம்





பரங்கிபேட்டையில் ஸ்ரீதர் வாண்டையார் இன்று கட்சி அலுவலகத்தில் ஊர் முக்கியஸ்தர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்... இன்று பிற்பகல் ஜும்மா விற்கு பிறகு பரங்கிபேட்டை மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்



Monday, November 8, 2010

ஹர்பஜன் சிங் அதிரடி சதம் . நாங்கள் நம்பர் ஒன் அணிதான் என்று நிறுபித்தது இந்தியா

அகமதாபாத் 08/11/2010

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் தலை நகர் அகமதாபாத்தில் கடந்த நான்கு நாட்களாக நடை பெற்று வந்தது. இதில் முதலில் பேட் செய்த
இந்திய அணி 487 ரன்கள் எடுத்தது சேவாக் மற்றும் டிராவிட் சதம் விளாசினர்.



இதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்சில் 459 ரன்கள் எடுத்தது இதில் ரய்டர் சதம் அடித்தார் மற்றும் தான் விளையாடிய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் கண் வில்லியம்சன் இவர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த எட்டாவது வீரர் ஆவார் . தொடர்ந்து தனது இரண்டாவது இந்நிக்சை தொடங்கிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர இறுதியில் 15 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் தோனியும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.ஐந்தாம் நாளான இன்று நிதானமாக ஆடிய லக்ஸ்மன் 91 ரன்கள் குவித்தார் அதிரடியாகவும் நிதானத்துடனும் ஆடிய ஹர்பஜன் சிங் தனது முதல் சத்தத்தை விளாசினார்.இவர் 115 ரன்கள் 193 பந்துகளில் விளாசினார். ஹர்பஜன் சிங் மற்றும் லக்ஸ்மன் ஜோடி இந்திய அணியை வலுவான நிலைல்கு கொண்டு சென்றது. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்சில் 266 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியை விட 292 ரன்கள் முன்னிலை பெற்றது. இதை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 22-1 எடுத்திருந்த நிலையில் ஆட நேரம் முடிவடைந்தது. இதனால் வெற்றி தோல்வி இன்றி டிரா வில் முடிவடைந்தது.

இந்திய அணிக்கும் ஹர்பஜன் சிங்கிற்கும் வாழ்த்துக்கள்

Sunday, November 7, 2010

இவர்கள் சின்னஞ் சிறிய வேலைக்காரர்கள்...

இப் படங்களைப் பார்க்கும் முன்பு நீங்களும், உங்கள் குழந்தைகளும் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகளென எண்ணிக் கொள்ளுங்கள்.

உலகில் சிறுவர் தினத்தன்று மட்டும்தான் சிறுவர்களையும், குழந்தைகளையும் கூர்ந்து கவனிப்பவர்களாக நாங்கள் இருக்கிறோம். அவர்கள் சின்னஞ் சிறிய மனிதர்கள். வளர்ந்தவர்களாகிய எம்மைப் பார்த்துத்தான் தங்கள் எதிர்கால அசைவுகளை வளர்த்துக் கொள்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். உலகை நல்லதாகவோ, தீயதாகவோ பார்க்கும் பார்வைகளை, சிறுவர்கள் பெரியவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? நமது குழந்தைகளின் தேவைகளுக்குக் கூட செவி மடுக்கவியலாதவர்களாக, நமது குழந்தைகளின் கேள்விகளுக்குக் கூட பதிலளிக்கவியலாதவர்களாக மிகுந்த வேலைப்பளுவுள்ளவர்களாக இருக்கிறோம். குழந்தைகளையும் கவனிக்கவியலாமல், தன்னையும் ஒழுங்காகக் கவனிக்கவியலாமல் ஓடியோடி உழைப்பதெல்லாம் யாருக்காக?

எங்களைச் சூழவுள்ள அழகான ஆடைகள், தீப்பெட்டிகள், சப்பாத்துக்கள், இரும்புச் சாமான்கள், உணவுப் பாத்திரங்கள் இப்படி எல்லாப் பொருட்களிலும் அப் பிஞ்சு விரல்களின் மெல்லிய ரேகைகள் படிந்தேயிருக்கின்றன. நாம் தான் அவற்றைக் கண்டு கொள்வதேயில்லை.

கீழேயுள்ள படங்களைப் பாருங்கள். தனது அடுத்த வேளை உணவுக்குக் கூட தானுழைத்துச் சம்பாதிக்க வேண்டிய நிலையிலுள்ள சிறுவர்கள் இவர்கள். சமூகத்தால் மீட்கப்பட வேண்டியவர்கள்.

# 11 வயதான ஜெய்னல் கடந்த மூன்று வருடங்களாக, இந்த வெள்ளி உணவுப் பாத்திரத் தொழிற்சாலையில் வேலை செய்கிறான். காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை செய்யும் வேலைக்கு மாதாந்தம் கிட்டத்தட்ட 10 US$ அளவு பணம் கிடைக்கிறது. இவனது பெற்றோர்கள் மிகவும் வறியவர்களாக இருப்பதனால் இவனைக் கல்வி கற்க அனுப்ப வழியில்லை. இவ் வேலைக்காக பெற்றோரே இவனைச் சேர்த்து விட்டதாகவும் மாதாந்தம் பணத்தை மட்டும் அவர்கள் பெற்றுக் கொள்வதாகவும் இந்தத் தொழிற்சாலை உரிமையாளர் கூறுகிறார்.



இரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்யுமொரு சிறுவன்

எரிக்கப்பட்டு புகையெழும்பும் பாரிய குப்பைக் குவியலை, ஏழே வயதான ஜெஸ்மின், பனிக்கால குளிர் காலையொன்றில் கிளறுகிறாள். இக் குப்பைக்குள்ளிருந்து கிடைக்கும் பேப்பர், இரும்பு போன்ற பொருட்களை சேகரித்து விற்றுக் கிடைக்கும் பணத்தின் மூலம் தனது குடும்பத்துக்கு உதவுவதாகக் கூறுகிறாள்.

கல்லுடைக்கும் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் சிறுவர்கள்

செங்கல் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் சிறுவர்கள். ஒருவர் சுமக்கும் ஒவ்வொரு ஆயிரம் செங்கல்களுக்கும் 0.9 US$ கூலியாக் கொடுக்கப்படுகிறது.

ரிக்ஷா உதிரிப் பாகங்கள் செய்யும் தொழிற்சாலையொன்றில் வேலை பார்க்கும் எட்டே வயதான முன்னாவின் கரங்கள் இவை. ஒரு நாளைக்கு பத்து மணித்தியாலங்கள் வேலை செய்தால், மாதமொன்றுக்கு 8 US$ சம்பளமாக இவனுக்குக் கொடுக்கப்படுகிறது. எப்பொழுதாவது மின்சாரம் தடைப்படும் நாட்களில் தனக்கு விளையாடவும் நேரம் கிடைப்பதாகக் கூறுகிறான்.

கதவுகளின் இரும்புப் பாகங்களைச் செய்யும் தொழிற்சாலையொன்றில் வேலை செய்கிறான் பத்து வயதான ஸைஃபுர். தனது சக தொழிலாளியைப் போல அல்லாது தன்னால் முகத்தை மறைக்காது வேலை செய்ய முடியுமெனக் கூறுகிறான்.

13 வயதான சிறுவன் இஸ்லாம் வேலை செய்வது ஒரு வெள்ளி உணவுப் பாத்திரக் கடையில். கடந்த இரண்டு வருடங்களாக வேலை செய்துவரும் அவனுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் இரண்டு வேளை உணவைத் தவிர பணமாக ஏதும் வழங்கப்படுவதில்லை.

ரஸுவுக்கு எட்டு வயது. ரிக்ஷா தொழிற்சாலையில் வேலை செய்யும் இவனுக்கு ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களென ஒரு மாதம் தொடர்ந்து வேலை செய்தால் 7 US$ சம்பளமாக வழங்கப்படுகிறது.


விளையாட்டுக்களின் மூலமும், சமூகத்தைக் கூர்ந்து கவனித்தும் தங்கள் உள விருத்திக்களை அதிகரித்துக் கொள்ள வேண்டிய பருவத்திலுள்ள இவர்களைப் போன்ற பல இலட்சக்கணக்கான சிறுவர்கள் பலர் இன்று பல்வேறு வற்புருத்தல்களின் கீழ் இவ்வாறாகத் தொழில்புரிய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு சம்பளமோ, போதியளவு பாதுகாப்போ இல்லை.

உலகில் அனேகமான பெரிய மனிதர்கள் மனசாட்சி சிறிதேனுமின்றி அதிக இலாபத்துக்காகவும், இலவச உழைப்புக்காகவும் சிறுவர்களைப் பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொள்கின்றனர்.

உலகில் பல்வேறுபட்ட தொழில்களிலும் பல சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உங்களுக்காகவே உழைக்கும் இவர்கள் சின்னஞ்சிறிய வேலைக்காரர்கள்.


உள்ளுக்குள் எந்த உறுத்தலுமின்றி இந்தக் கண்களை நேராகப் பார்க்க உங்களால் முடிகிறதா?


எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை