Friday, March 12, 2010

இலவச இரத்த பிரிவு பரிசோதனை முகாம்




இன்ஷா அல்லாஹ் நமது இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் M.S.முஹம்மத் யூனுஸ் நானா அவர்கள் தலைமையில் வரும் ஞாயிற்று கிழமை 14/03/2010 அன்று காலை 10am மணி முதல் மாலை 5pm மணி வரை நமது Friendspno சார்பாக நடக்கவிருக்கும் இலவச இரத்த பிரிவு பரிசோதனை முகாமில் அணைத்து சமய மக்களும் பங்குபெற்று பயனடையுமாறு கேட்டுகொள்கிறோம்.
குறிப்பு : இதில் இரத்த பிரிவு ஏற்கனவே தெரிந்தவர்களும் தங்கள் பெயரை பதிவுசெய்வதினால் அவசர இரத்த தேவைக்கு தாங்கள் விரும்பினால் உதவி புரிய வாய்பாக அமையும் என தெரிவித்து கொள்கிறோம்

Saturday, January 23, 2010

சர்வதேச பாஸ்போர்ட்(ordinary Indian Passport for Indian Citizens) பெற உடனே விண்ணப்பியுங்கள் ஹஜ் பயணிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

ஹஜ் பயணத்திற்கு சர்வதேச பாஸ்போர்ட்(ordinary Indian Passport for Indian Citizens) அவசியம் வேண்டும் என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது எனவே தமிழக ஹஜ் பயணிகள் உடனடியாக சர்வதேச பாஸ்போர்ட் (ordinary Indian Passport for Indian Citizens)பெற வின்னபிகுமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. ஹஜ் 2009 இல் சர்வதேச பாஸ்போர்ட்களில் ஹஜ் விசா பெறுவது தவிர்க்க இயலாதது என்று சவுதி அரேபியா அரசு முடிவு எடுத்துள்ளது என மும்பை , இந்திய ஹஜ் குழுவின் முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். எனவே 2010 இல் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் ஹஜ் பயணிகள் தங்களிடம் பாஸ்போர்ட் இல்லாதிருப்பின் அதற்காக இப்போத விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற வேண்டுகோள் விடப்பட்டுள்ளது....

நன்றி தின தந்தி

Wednesday, October 7, 2009

சிதம்பரம் நாடாளமன்ற தொகுதியில் இலவச வேலை வாய்ப்பு முகாம் நாளை 08/10/09 நடக்கிறது

சிதம்பரம் நாடாளமன்ற தொகுதி மேம்பாட்டு மையம் தொடக்க விழா , நடமாடும் கட்டணமில்லா கம்ப்யூட்டர் பயிற்சி மையம் மற்றும் இலவச வேலை வாய்ப்பு முகாம் போன்றவை சிதம்பரம் ஜி.எம் வாண்டையார் திருமண மஹாலில் நாளை வியாழகிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் படித்து பட்டம் பெற்று வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு வழி காட்டவும், உதவி செய்யவும் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களின் ஒத்துளைபோடு சிதம்பரம் நாடாளமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவனின் முயற்சியால் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடை பெறுகிறது.

இந்த இலவச வேலை வாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இளங்கலை அறிவியல் பட்டதாரிகள் , இன்ஜினியரிங் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். தங்களது கல்வி சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் வர வேண்டும். கட்டணம் ஏதும் இல்லை.
Source : தினத்தந்தி(07 - 10 - 09) பார்க்க பக்கம் என் : 8

தி மு க சார்பில் வேலை வாய்ப்பு முகாம் அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவிப்பு


Saturday, September 19, 2009

கடல் ஆய்வு செயற்கைக்கோள் செப். 23ஆம் தேதி செலுத்தப்படும்: இஸ்ரோ

நமது நாட்டின் கடல் பரப்பில் எங்கெல்லாம் மீன் வளம் உள்ளது என்பதையும், கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்யும் திறனையும் கொண்ட ஓசன்சாட்-2 என்ற செயற்கைக்கோளை வரும் 23ஆம் தேதி விண்ணில் செலுத்துகிறது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ).பி.எஸ்.எல்.வி. என்றழைக்கப்படும் இந்தியாவின துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் மூலம் 970 கி.கி. எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணி்ல் செலுத்தப்படுகிறது.மீன் வளம், கடலோரப் பகுதிகள் ஆய்வு, வானிலை மாற்றம் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் கருவிகளுடன் கூடிய ஓசன்சாட்-2 வரும் 23ஆம் தேதி மதியம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது என்று இஸ்ரோ பேச்சாளர் எஸ். சத்தீஸ் கூறினார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணில் செலுத்தப்பட்ட ஓசன்சாட்-1 என்ற செயற்கைக்கோள் கடலின் உயிரி பரவல் மற்றும் கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்து வந்தது. இந்த செயற்கைக்கோளின் வாழ் காலம் முடிந்துவருவதைத் தொடர்ந்து அதன் இரண்டாவது மேம்படுத்தப்பட்ட வடிவான ஓசன்சாட்-2 செலுத்தப்படுகிறது.
Source: Webdunia

தென் ஆப்ரிக்கா சென்றது இந்திய அணி



மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் கேப்டன் தோனி, சச்சின் உள்ளிட்ட இந்திய அணியினர், தென் ஆப்ரிக்கா சென்றனர். தென் ஆப்ரிக்காவில் வரும் 22ம் தேதி முதல் அக்., 5ம் தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. "ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளும், "பி' பிரிவில் இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இத்தொடரில் பங்கேற்க இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே தென் ஆப்ரிக்கா சென்றுவிட்டன. இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை வெற்றியுடன் முடித்த இந்திய அணியினர், நேற்று தென் ஆப்ரிக்கா பயணம் மேற்கொண்டனர். இவர்கள் மும்பையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றனர். பின், துபாயிலிருந்து விமானம் மூலம் ஜோகனஸ்பர்க் செல்கின்றனர். இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் நாளை விளையாடுகிறது. வரும் 26ம் தேதி இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியினர்: தோனி (கேப்டன்), சச்சின், டிராவிட், காம்பிர், யுவராஜ், ரெய்னா, ஹர்பஜன், யூசுப் பதான், அபிஷேக் நாயர், பிரவீண் குமார், ஆஷிஸ் நெஹ்ரா, ஆர்.பி. சிங், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, தினேஷ் கார்த்திக்.

Source : Dinamalar

உலகம் முழுவதும் 100 கோடிபேர் பட்டினி கிடக்கும் நிலை : ஐ.நா. கவலை


உலகிலுள்ள ஏழை மக்களின் பட்டினியைப் போக்க ஐ.நா.சபையின் உலக உணவுத் திட்டம் உதவி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு நடப்பாண்டு 33 ஆயிரத்து 500 கோடி ரூபா நிதிக்கு 'பட்ஜெட்' போடப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபா மட்டுமே கிடைத்துள்ளது. பொருளாதார பின்னடைவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.சபை கவலை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஐ.நா.உலக உணவு திட்ட அலுவலகம் கூறுகையில்,"மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். பொருளாதார பின்னடைவு காரணமாக நிலைமை மோசமாகி உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பது மக்களை மேலும் அதிகளவில் பாதித்துள்ளது. இதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கூட விதிவிலக்கல்ல. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் தொகை அதிகமாகவுள்ள நாடுகளில் இந்தியா 25 ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியிலில் 11ஆவது இடத்தில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

Source :வீரகேசரி இணையம் 9/18/2009 2:36:22 PM