Friday, January 9, 2009
இறப்பு செய்தி
டில்லி சாஹிப் தர்கா புது நகரில் குப்பத்கர் என்கிற பசீர் அஹமத் அவர்களின் மருமகனும், சுலைமான் அவர்களின் மச்சானும், ரஹ்மதுல்லாஹ், முத்தலீப் இவர்களின் சகலபாடியுமான பண்டாரி சம்சுதீன் அவர்கள் மர்ஹீம்ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் 4:00 மணி அளவில் நல்லடக்கம் கிலுர்நபி பள்ளியில்
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற கல்லூரி மாணவர்ககுக்கு மாதந்தோறும் கல்வி உதவிதொகை
12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற கல்லூரி மாணவர்ககுக்கு மாதந்தோறும் கல்வி உதவிதொகை 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது ....
இந்த கல்வி உதவி தொகையை பெற +2 தேர்வில் 80% மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். இந்த கல்வி ஆண்டில் (2008 - 09) இளங்கலை பட்டம் படிக்கும் போது மாதம் ரூ:1000 முதுகலை பட்டம் படிக்கும் போது மாதம் ரூ:2000 பெறலாம்.
மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் கல்வி படிக்கும் இளங்கலை மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ:1000 நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுகளில் மாதம் ரூ:2000 வழங்கப்படும்.இந்த உதவி தொகை ஒரு கல்வி ஆண்டில் பத்து மாதங்களுக்கு கிடைக்கும். குறிப்பு : குடும்ப ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் மொத்தம் 4883 மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை வழங்க பட இருக்கிறது. உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதர விபரங்களை www.tn.gov.in/dge என்ற இணயத்தில் பெற்று கொள்ளலாம்.
இணை இயக்குனர் (மேல்நிலை)அரசு தேர்வுகள் இயக்கம் ,
D.P.I. வளாகம் கல்லூரி சாலை,
சென்னை - 600006
பூர்த்தி செய்ய பட்ட விண்ணப்பத்தை நேரடியாகவோ பதிவு அஞ்சல் அல்லது விரைவு தபால் மூலமாகவோ இந்த மாதம் 28-01-09 தேதிக்குள் மேலே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.விண்ணப்பம் அனுப்பும் தபால் உரையின் மேல் கல்லூரி மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவி தொகை திட்டம் என்று குறிப்பிட பட வேண்டும்.
நன்றி தின தந்தி
Monday, January 5, 2009
பரங்கிபேட்டை - கிள்ளை பாலம் வேலை துவங்கியது
பரங்கிபேட்டையிளிரிந்து சிதம்பரத்திற்கு செல்லும் வியாபாரிகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன் அடைவார்கள்.
கிழக்கு கடற்கரை சாலையாக அமைய வாய்புள்ளதால் பரங்கிபேட்டையிளிரிந்து கடலூர் மற்றும் சென்னைக்கு செல்லும் மாணர்வர்கள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைதனர்.இது நமதூர் மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது.
இதனால் நீண்ட காலமாக பேருந்து வசதி குறைவாக இருந்த நமதூரில் பேருந்து வசதி மற்றும் புதிய பேருந்து நிலையம் அமைய அதிக வாய்புள்ளது.
நன்றி - cwo
Sunday, January 4, 2009
ஜிமெயில் பயனாளர்களுக்கான செய்தி
ஜிமெயில் பயனாளர்களுக்கான செய்தி:ஜிமெயில் தனது பயனாளர்களுக்காக ஒரு புதிய பாதுகாப்பு முறையை ஏற்படுத்தியுள்ளது.நீங்கள் உங்கள் அலுவலகத்திலோ அல்லது வெளியில் ப்ரௌசிங் செண்டரிலோ ஜிமெயில் பார்த்துவிட்டு லாக்-அவுட் செய்யாமல் வந்துவிட்டால் உடனடியாக வேறு கணினி மூலமாக லாகின் செய்து அந்த கணினியில் உள்ள உங்கள் ஜிமெயில் இணைப்பை துண்டிக்க முடியும்.அல்லது உங்கள் ஜிமெயிலை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்றும் அறிந்து கொள்ளலாம்.http://googlesystem.blogspot.com/2008/07/find-who-has-access-to-your-gmail.html
தமிழில் ஜிமெயிலை தமிழில் காண உங்கள் ஜிமெயில் திரையில் மேல் பகுதியில் setting என்ற பகுதிக்கு சென்று ,அதில் Gmail display Language -ல் Tamil- தேர்வு செய்தால் உங்கள் ஜிமெயில் திரை இப்போது தமிழில் தெரியும்.
நன்றி தமிழ் கம்ப்யூட்டர்
Saturday, January 3, 2009
இறப்புச் செய்தி
நாட்டான் கிணற்று முடுக்கில் மர்ஹீம் முஹம்மத் சித்திக் அவர்களின் மகனாரும், மர்ஹீம் ஹக்கீம் , முத்து நானா அவர்களின் மருமகனாரும் S.உதுமான் அலி அவர்களின் தம்பியும் , கவுஸ் ஹமீது, சாகுல், முத்து ராஜா இவர்களின் தகப்பனாருமாகிய S.முஸ்தபா மர்ஹீம் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4:00 மணி அளவில் நல்லடக்கம் வாத்தியா பள்ளயில்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
Thursday, January 1, 2009
இறப்புச் செய்தி
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
புதுபள்ளி சம்பந்தமாக இரு தரப்பினருடன் சுமூகம்.
ஜமாஅத் இருதரபினரின் பட்டியலை பெற்று கொண்டு ஆலோசித்து நிர்வாகிகள் தேர்ந்து எடுக்க உள்ளனர்...... இருதரப்பினர் மீதான வழக்கும் பள்ளி நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு சம்பந்தமாக உள்ள இடைகால தடையையும் வாபஸ் வாங்க படுகிறது.....
இன்ஷா அல்லாஹ் அமைய போகும் புதிய நிர்வாகத்திற்காக துவ ...
செய்வோம் ..
நன்றி கிரசன்ட்