Friday, January 9, 2009

12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற கல்லூரி மாணவர்ககுக்கு மாதந்தோறும் கல்வி உதவிதொகை

12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற கல்லூரி மாணவர்ககுக்கு மாதந்தோறும் கல்வி உதவிதொகை 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது ....
இந்த கல்வி உதவி தொகையை பெற +2 தேர்வில் 80% மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். இந்த கல்வி ஆண்டில் (2008 - 09) இளங்கலை பட்டம் படிக்கும் போது மாதம் ரூ:1000 முதுகலை பட்டம் படிக்கும் போது மாதம் ரூ:2000 பெறலாம்.
மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் கல்வி படிக்கும் இளங்கலை மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ:1000 நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுகளில் மாதம் ரூ:2000 வழங்கப்படும்.இந்த உதவி தொகை ஒரு கல்வி ஆண்டில் பத்து மாதங்களுக்கு கிடைக்கும். குறிப்பு : குடும்ப ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் மொத்தம் 4883 மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை வழங்க பட இருக்கிறது. உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதர விபரங்களை www.tn.gov.in/dge என்ற இணயத்தில் பெற்று கொள்ளலாம்.

இணை இயக்குனர் (மேல்நிலை)அரசு தேர்வுகள் இயக்கம் ,

D.P.I. வளாகம் கல்லூரி சாலை,

சென்னை - 600006

பூர்த்தி செய்ய பட்ட விண்ணப்பத்தை நேரடியாகவோ பதிவு அஞ்சல் அல்லது விரைவு தபால் மூலமாகவோ இந்த மாதம் 28-01-09 தேதிக்குள் மேலே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.விண்ணப்பம் அனுப்பும் தபால் உரையின் மேல் கல்லூரி மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவி தொகை திட்டம் என்று குறிப்பிட பட வேண்டும்.

நன்றி தின தந்தி

No comments:

Post a Comment