Wednesday, May 20, 2009
கிரசென்ட் நல் வாழ்வு சங்கத்தில் துவங்கியது தட்டச்சி பயிற்சி
Tuesday, May 19, 2009
நகர ஜமாதுல் உலமா நடத்திய கோடை கால தீனியாத் பயிற்சி நிறைவு விழா
நகர ஜமாதுல் உலமா நடத்திய கோடை கால தீனியாத் பயிற்சி மற்றும் நிறைவு விழா கவுஸ் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இதில் வகுப்பு வாரியாக பிள்ளைகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டி சென்றனர்.இதில் பயான் போட்டியில் பங்குபெற்ற பாரிஸ் அஹமத் என்ற மாணவர் இந்திய சுத்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் மிக சிறப்பாக பேசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார், அனைவரின் பாராட்டையும் பெற்றார் எங்களின் சர்ர்பாக அவருக்கு வாழ்த்துக்கள்.அதற்கு முன்னர் நபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பில் பேசிய ரெஜினா பேகம் மற்றும் உம்மு ஹபிபா நபிகளாரின் தியாகத்தையும் அவர்கள் செய்த உலக சாதனைகளை பற்றியும் மிக அற்புதமாக பேசினார்கள்.அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன , இதில் ஜகரியா நானா , டவுன் ஹாஜி யஹயா சாபு, காஜா மைனுதீன் மிஸ்பாஹி, அபுதுல் சமத் ரசாதி , லியாகத் அலி மன்பயி சித்திக் அலி பாகவி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர் விழா இனிதே நிறைவுற்றது.
Monday, May 18, 2009
நகர ஜமாதுல் உலமா நடத்திய தீனியாத் போட்டிகள்
Thursday, March 12, 2009
நன்றி அறிவிப்பு


இப்படிக்கு
நண்பர்கள் பி என் ஒ
Friendspno
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
Friday, January 9, 2009
இறப்பு செய்தி
டில்லி சாஹிப் தர்கா புது நகரில் குப்பத்கர் என்கிற பசீர் அஹமத் அவர்களின் மருமகனும், சுலைமான் அவர்களின் மச்சானும், ரஹ்மதுல்லாஹ், முத்தலீப் இவர்களின் சகலபாடியுமான பண்டாரி சம்சுதீன் அவர்கள் மர்ஹீம்ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் 4:00 மணி அளவில் நல்லடக்கம் கிலுர்நபி பள்ளியில்
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற கல்லூரி மாணவர்ககுக்கு மாதந்தோறும் கல்வி உதவிதொகை
12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற கல்லூரி மாணவர்ககுக்கு மாதந்தோறும் கல்வி உதவிதொகை 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது ....
இந்த கல்வி உதவி தொகையை பெற +2 தேர்வில் 80% மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். இந்த கல்வி ஆண்டில் (2008 - 09) இளங்கலை பட்டம் படிக்கும் போது மாதம் ரூ:1000 முதுகலை பட்டம் படிக்கும் போது மாதம் ரூ:2000 பெறலாம்.
மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் கல்வி படிக்கும் இளங்கலை மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ:1000 நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுகளில் மாதம் ரூ:2000 வழங்கப்படும்.இந்த உதவி தொகை ஒரு கல்வி ஆண்டில் பத்து மாதங்களுக்கு கிடைக்கும். குறிப்பு : குடும்ப ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் மொத்தம் 4883 மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை வழங்க பட இருக்கிறது. உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதர விபரங்களை www.tn.gov.in/dge என்ற இணயத்தில் பெற்று கொள்ளலாம்.
இணை இயக்குனர் (மேல்நிலை)அரசு தேர்வுகள் இயக்கம் ,
D.P.I. வளாகம் கல்லூரி சாலை,
சென்னை - 600006
பூர்த்தி செய்ய பட்ட விண்ணப்பத்தை நேரடியாகவோ பதிவு அஞ்சல் அல்லது விரைவு தபால் மூலமாகவோ இந்த மாதம் 28-01-09 தேதிக்குள் மேலே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.விண்ணப்பம் அனுப்பும் தபால் உரையின் மேல் கல்லூரி மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவி தொகை திட்டம் என்று குறிப்பிட பட வேண்டும்.
நன்றி தின தந்தி
Monday, January 5, 2009
பரங்கிபேட்டை - கிள்ளை பாலம் வேலை துவங்கியது


பரங்கிபேட்டையிளிரிந்து சிதம்பரத்திற்கு செல்லும் வியாபாரிகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன் அடைவார்கள்.
கிழக்கு கடற்கரை சாலையாக அமைய வாய்புள்ளதால் பரங்கிபேட்டையிளிரிந்து கடலூர் மற்றும் சென்னைக்கு செல்லும் மாணர்வர்கள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைதனர்.இது நமதூர் மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது.
இதனால் நீண்ட காலமாக பேருந்து வசதி குறைவாக இருந்த நமதூரில் பேருந்து வசதி மற்றும் புதிய பேருந்து நிலையம் அமைய அதிக வாய்புள்ளது.
நன்றி - cwo
